மனைவியை கொன்ற தொழிலாளி வீடு சூறை; 10 பேர் மீது வழக்கு


மனைவியை கொன்ற தொழிலாளி வீடு சூறை; 10 பேர் மீது வழக்கு
x

மனைவியை கொன்ற தொழிலாளி வீட்டை சூறையாடிய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

மதுரை

மேலூர்

மேலூர் அருகே உள்ள தேற்குன்றம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமர் (வயது45). இவர் சில நாட்களுக்கு முன் குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி ரேவதிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் மேலவளவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராமரின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி வீட்டினுள் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து ராமரின் தாயார் செல்லம்மாள் மேலவளவு போலீசில் அளித்த புகாரின் பேரில் ரேவதியின் தம்பி கார்த்திக் மற்றும் அவரது நண்பர் பாலாஜி உள்பட 10 பேர் மீது மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story