நித்திரவிளை அருகே மகள்களுக்கு திருமணம் ஆகாததால் தொழிலாளி தற்கொலை


நித்திரவிளை அருகே மகள்களுக்கு திருமணம் ஆகாததால் தொழிலாளி தற்கொலை
x

நித்திரவிளை அருகே மகள்களுக்கு திருமணம் ஆகாததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே மகள்களுக்கு திருமணம் ஆகாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டார்.

கூலி தொழிலாளி

நித்திரவிளை அருகே உள்ள மணக்காலையை சேர்ந்தவர் விஷ்ணுதாஸ் (வயது60), கூலித்தொழிலாளி. இவருக்கு லலிதா குமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமண வயதாகிறது. இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பல இடங்களில் வரன் பார்த்தனர். ஆனால், எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதனால் விஷ்ணுதாஸ் மனவருத்தத்தில் இருந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இவர்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் விஷ்ணுதாஸ் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லலிதாகுமாரியிடம் தகவல் தெரிவித்தனர்.

பரிதாப சாவு

அவர் விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் விஷ்ணுதாசை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள்களுக்கு திருமணம் ஆகாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story