தோல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்


தோல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்
x

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த மாதனூர் அருகே உள்ள சோலூர் ஊராட்சியில் தனியார் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தோல் தொழிற்சாலை மூடப்பட்டது. அப்போது பாதி பேருக்கு சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மென்ட் வழங்கப்பட்டது. பலருக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

பலமுறை தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் நிலுவைத் தொகை வழங்கக்கோரியும், இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பூட்டி கிடந்த தோல் தொழிற்சாலையின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அவர்கள் சம்பள நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மென்ட் வழங்கும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story