நாணல் குச்சிகளை விற்பனை செய்யும் தொழிலாளர்கள்


நாணல் குச்சிகளை விற்பனை செய்யும் தொழிலாளர்கள்
x

கம்பம் பகுதியில் நாணல் குச்சிகளை தொழிலாளர்கள் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

தேனி

கம்பத்தில் சேனை ஓடை மற்றும் வீரப்பநாயக்கன் குளம் பகுதியில் நாணல் தட்டைகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த நாணல் குச்சிகளை வெற்றிலை கொடிக்கால் நடவு, பூச்செடி நடவு, நாற்றாங்கால் நடவு பணிகளுக்கு பயன்படுகின்றன. குறிப்பாக திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு விவசாய பணிகள் மேற்கொள்ள நாணல் குச்சிகள் தேவைப்படுகின்றன. இதைத்தொடர்ந்து சேனை ஓடை, வீரப்பநாயக்கன் குளம் கரைப் பகுதியில் வளர்ந்துள்ள நாணல் குச்சிகளை விவசாய கூலித்தொழிலாளர்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் பச்சையாக தரம் பிரிக்கப்படாத 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு நாணல் குச்சிகள் ரூ.50 முதல் ரூ.100-க்கும், தரம் பிரித்து 100 எண்ணிக்கை கொண்ட நாணல் குச்சிகள் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து விவசாய கூலித்தொழிலாளர்களிடம் கேட்டபோது, கூலித்தொழில் கிடைக்காததினால் ஆறு, குளங்களின் கரைகளில் வளர்ந்துள்ள நாணல் தட்டைகளை சேகரித்து விற்பனை செய்து வருகின்றோம். பெரிய அளவிற்கு வருமானம் இல்லாவிட்டாலும் செலவு போக அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றோம் என்றனர்.


Next Story