தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட ெதாழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்டநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜா, சித்திரைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் ராணிப்பேட்டையில் நடைபெறும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, மாநாட்டிற்கு நிதி அளிப்பது மற்றும் வயது முதிர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதியோர் இல்லம் அமைக்க கேட்டு கொள்வது, 60 வயதை கடந்த பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பிழைப்பூதியம் வழங்க கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணைத்தலைவர் மலையம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.