ஒத்தக்கடை, அழகர்கோவில் பகுதியில் இன்று மின்தடை
ஒத்தக்கடை, அழகர்கோவில் பகுதியில் இன்று மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
ஒத்தக்கடை, அழகர்கோவில் பகுதியில் இன்று மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
மதுரை ஒத்தக்கடை, அழகர் கோவில், தனியாமங்கலம், வண்டியூர் துணை மின் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட உயர் மின்னழுத்த பாதையில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால்தோட்டம், மீனாட்சி மிஷன் காலனி, காந்திநகர், மங்களக்குடி, ஜெயவிலாஸ் கார்டன், ஹரிணி ஆறுமுகா நகர், நாயக்கன்பட்டி, பொய்கை கரைபட்டி, அழகாபுரி, அழகர்கோவில், அ.வலையபட்டி, மூணூர், கோட்டவாசல், கிடாரிபட்டி, வெளிச்சநத்தம், கைலாசபுரம், வெள்ளியங்குன்றம், சின்னபட்டி, காவனூர், மரக்காயபுரம், துக்கலாம்பட்டி, அம்மன்கோவில்பட்டி.
சருகுவலையபட்டி, வடக்கு வலையபட்டி, கீழவளவு, இ.மலம்பட்டி, பாப்பாகுடிபட்டி, உடன்பட்டி, கொங்கம்பட்டி, காயம்பட்டி, செம்மினிபட்டி, முத்துசாமிபட்டி, சுமதிபுரம், அரியூர்பட்டி, கம்பர்மலைப்பட்டி, எல்.கே.டி. நகர், விரகனூர், கோழிமேடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.
தெத்தூர்
சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் சேந்தமங்கலம் பீடர் மற்றும் வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் தெத்தூர் பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதன்படி மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கி பட்டி, பொந்தும்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூழாண்டிப்பட்டி, செம்மினிப்பட்டி, அங்கப்பன் கொட்டம், பெரியார் நினைவுசமத்துவபுரம், தாடகைநாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமய நல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம்
மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் எம்.எம்.சி. காலனி, ஜெயபாரத் சிட்டி, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, மல்லிகை வீடுகள் குடியிருப்பு பகுதிகள், பிரியங்கா அவென்யு, அர்ஜீனாநகர், க்ளாட்வே கிரீன் சிட்டி, வி.ஓ.சி. தெரு, பராசக்தி நகர், காவேரிநகர் 1 முதல் 7-வது தெரு வரை, ஆறுமுகநகர் 1,2-வது தெரு, ஜவகர் நகர், ஸ்ரீராம் நகர், எம்.எம்.சிட்டி, தங்கம் நகர், கர்ப்பகம் நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.