உலக வங்கி குழு ஆய்வு


உலக வங்கி குழு ஆய்வு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:48+05:30)

கடையம் வட்டாரத்தில் உலக வங்கி குழு ஆய்வு செய்தது

தென்காசி

கடையம்:

தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டம் உலக வங்கியின் நிதி உதவியோடு வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இணைத்து தமிழக அரசு செய்து வருகிறது. அவ்வாறு உலக வங்கியின் நிதி உதவியோடு செயல்படும் இந்த திட்டத்தினை ஆய்வு செய்வதற்காக உலக வங்கி நிபுணர் குழு வருகை தந்து ஆய்வு செய்தது.

இந்த ஆய்வினை உலக வங்கி நீர் மேலாண்மை சிறப்பு நிபுணர் ஜூப்ஸ் டோட்ஜீஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகர் வனிதா ஹோம்ரூனு ஆய்வு செய்தனர். இவர்களுடன் சென்னையை சேர்ந்த பயிர் நிபுணர் சிவகுமார், கிருஷ்ணன், பொறியாளர் சந்திரசேகர், வித்யாசாகர், விஜயராம், ஜூடித் டி சில்வா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

கடையம் வட்டாரத்தில் மந்தியூர் கிராமத்தில் தோட்டக்கலை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்த இந்த குழு திட்டத்தின் பயன்பாடு குறித்தும் தோட்டக்கலை - மலை பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனம் குறித்தும் மற்றும் கடையம் வட்டாரத்தில் தென்னையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ள கத்திரி அதனால் பயனடைந்து நெல்லியில் ஊடு பயிராக சிறு கிழங்கு சாகுபடி செய்து வருவது குறித்தும் அங்குள்ள முன்னோடி விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி நிபுணர் குழுவிற்கு தோட்டக்கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விளக்கி கூறினார்.

இந்த ஆய்வின் போது கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன், தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா மற்றும் பலர் உடன் இருந்து ஆய்விற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.Next Story