வாழை சாகுபடி செயல் விளக்க திடலில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு


வாழை சாகுபடி செயல் விளக்க திடலில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே வாழை சாகுபடி செயல் விளக்க திடலில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே வாழை சாகுபடி செயல் விளக்க திடலில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு மேற்கொண்டார்.

உலக வங்கி நிதி உதவி

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீர் நுட்பமையம் மூலமாக தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டம் காவிரி மற்றும் கொள்ளிடம் உப வடிநிலப்பகுதியில் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி வேளாண் செயல்முறை விளக்க திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த திட்டத்தில் காவிரி உப வடிநிலப்பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் மற்றும் ஆறுபாதி கிராமங்களில் ராஜசேகரன் என்ற விவசாயியின் வயலில் வாழை சாகுபடியில் துல்லிய பண்ணையம் தொடர்பான செயல் விளக்க திடல் அமைக்கப்பட்டது.

ஆய்வு

இந்த நிலையில் சென்னை பலதுறை திட்டப்பிரிவு தோட்டக்கலை வல்லுனரும், உலக வங்கி பிரதிநிதியுமான சாஜன் குரியன், நிர்வாக பொறியாளர் சுப்புராஜ், வேளாண்மை துறை வல்லுனர் ஷாஜகான், தோட்டக்கலை வல்லுனர் வித்யாசாகர் ஆகியோர் வாழை துல்லிய பண்ணை செயல் விளக்க திடலை பார்வையிட்டு, திட்டத்தின் நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது களை கட்டுப்பாடு, திரவ உர நிர்வாகம், நீர் மேலாண்மை, சரிசமமான வளர்ச்சி குறித்து உழவியல் இணை பேராசிரியர் இளமதி, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை உதவி பேராசிரியர் அருள்மொழி, சீர்காழி புதுமை அக்ரிடெக் சுரேஷ்குமார் ஆகியோர் உலக வங்கி பிரதிநிதிக்கு விளக்கம் அளித்தனர்.


Next Story