ஆவூர் ஊர்புற நூலகத்தில் உலக புத்தக தின விழா


ஆவூர் ஊர்புற நூலகத்தில் உலக புத்தக தின விழா
x

ஆவூர் ஊர்புற நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலை ஒன்றியம், ஆவூர் ஊர்புற நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் சேவியர் தலைமை தாங்கினார். ஆவூர் நூலக நண்பரும், திட்ட தன்னார்வலருமான ஆசிரியர் சகாயமேரி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 35 மாணவ-மாணவிகள் திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை, கதை சொல்லுதல், குழு பாடல் மற்றும் நூலக விழிப்பணர்வு சார்ந்த நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று புத்தக தின விழா நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நூலகர் வாசகர் வட்டத் தலைவர் சேவியர் மாணவ-மாணவிகளுக்கு அவர்களது சொந்த செலவில் எழுது பொருட்களை பரிசாக வழங்கினார். 125 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். நிகழ்ச்சியில் வாசகர் வட்ட உறுப்பினர் விக்டோரியா, நூலக உதவியாளர் அனுசியா, வாசகர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் நாகலெட்சுமி நன்றி கூறினார்.


Next Story