உலகக் கோப்பை ஆக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டியில் உலகக் கோப்பை ஆக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில், உலகக் கோப்பை ஆக்கிப்போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் நாகமுத்து தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் விஜயராணி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மலர் கொடி வரவேற்றுப் பேசினார்.
இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது ரியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆக்கி விளையாட்டு பற்றி எடுத்துக் கூறி பேசினார். இதனைத் தொடர்ந்து உலக ஆக்கி கோப்பை லோகோ பொருத்திய பனியனை பள்ளி முதல்வர் மலர்கொடியிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின், தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழகச் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, ஆக்கி கழக உறுப்பினர் முருகன், காளிமுத்து பாண்டிராஜா, மூர்த்தி, சந்தனராஜ், தெய்வபாலன், மணிமாறன், பெரியதுரை, உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்தர், வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், பள்ளி துணை முதல்வர் சுதாகர் நன்றி கூறினார்.