உலகக் கோப்பை செஸ்- பிரக்ஞானந்தாவிற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து


உலகக் கோப்பை செஸ்- பிரக்ஞானந்தாவிற்கு  நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
x

வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்

சென்னை,

'பிடே' உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.

இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. அதே போல் 2-வது சுற்று ஒன்றரை மணி நேரத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற டை-பிரேக்கர் ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில்,

"செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும், 5 முறை உலகச் சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன்- ஐ எதிர்கொண்டு இந்தியாவிற்காகக் களமிறங்கிய தமிழக வீரர் பிர்கஞானந்தா இறுதிவரை தீரத்துடன் போராடினார். வெற்றிவாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டாலும் பல கோடி மனங்களை ஈர்த்த பிரக்ஞானந்தா நம் பெருமிதம். அவருக்கு என் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story