பெரிய திரையில் ஒளிபரப்பான உலக கோப்பை கால்பந்து போட்டி
பாளையங்கோட்டை மேடை போலீஸ் நிலையத்தில் பெரிய திரையில் உலக கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பானது.
திருநெல்வேலி
உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் அர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் மோதின. இதனை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் பாளையங்கோட்டை மேற்கு கோட்டைவாசல் மேடை போலீஸ் நிலைய கட்டிடத்தில் பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனை பெரியவர்கள், இளைஞர்கள் என 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். அர்ஜென்டினா அணியை சேர்ந்த மெஸ்சியின் ஆட்டத்தை ரசிகர்கள் உற்சாகமாக ரசித்தனர். மக்கள் அதிக அளவில் கூடியதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story