உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா


உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஸ்டெர்லைட் நிறுவன இயக்க அலுவலர் ஏ.சுமதி தலைமை தாங்கினார். அன்னம்மாள் கல்லூரி பேராசிரியை சுதா குமாரி முன்னிலை வகித்தார். மதுரை தியாகம் அறக்கட்டளை இயக்குனர் அமுதா சாந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாற்றுத்திறனாளி நல சங்க தலைவர் ரமேஷ், ஸ்டெர்லைட் நிறுவன மக்கள் தொடர்பு மற்றும் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சர்வேசன், சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கல்வி உதவிகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் ஸ்டெர்லைட் நிறுவன மேலாளர் மாரியப்பன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story