உலக பூமி தின விழிப்புணர்வு பிரசாரம்
கீழ்வேளூர் அருகே நாகலூரில் உலக பூமி தின விழிப்புணர்வு பிரசாரம்
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே நாகலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது. இதை தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தொடங்கி வைத்தார். இதில் தேசிய பசுமைப்படை மாணவர்கள் பறை இசையுடன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களை பாடி தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர். இதையொட்டி பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்றுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கீழநாகலூர், மேலநாகலூர், பள்ளிக்கூடத்தெரு, பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் தெருமுனை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தேசிய பசுமைப்படை ஆசிரியர் அருள்ஜோதி, ஆசிரியர்கள் அருள் செல்வம், லோகநாதன், சீனிவாசன், செல்வரத்தினம், சங்கரவடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.