உலக முதியோர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


உலக முதியோர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

ஊர்வலம்

ஈரோடு

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை, இந்திய மருத்துவ சங்கம் ஆகியன சார்பில் உலக முதியோர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு மாவட்ட சமூக நல அதிகாரி எஸ்.சண்முகவடிவு தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, நந்தா பிசியோதெரபி கல்லூரி முதல்வர் மணிவண்ணன், மனநல டாக்டர் பிரனேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு கலைமகள் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பெருந்துறைரோடு வழியாக சென்று அபிராமி கிட்னிகேர் ஆஸ்பத்திரியில் நிறைவடைந்தது. இதில் நந்தா கல்லூரிகளின் மாணவ-மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றார்கள். தொடர்ந்து முதியோர்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மனநல டாக்டர் எஸ்.ஆனந்த், உளவியல் நிபுணர் ஜெயபிரகாஷ், மனநல ஆலோசகர் கவிதா, ஜீவிதம் பவுண்டேசன் நிறுவனர் மனீஷா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் சரவணன், அபிராமி கிட்னி கேர் ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story