திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மற்றும் வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழாவை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. கல்லூரி சுயநிதிப்பிரிவு நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வ தொண்டர்கள் 50 பேர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினர்.

விழாவில் வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜெகதீஷ், கிராம நிர்வாக அலுவலர் வேல் ஜோதி, பஞ்சாயத்து செயலாளர் பட்டுகனி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனையின்பேரில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன், இளையோர் செஞ்சிலுவை சங்க அலுவலர் பார்வதி தேவி ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story