சாகுபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்


சாகுபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
x

சாகுபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிற்சாலை மூத்த செயல் உதவி தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன், துணை தலைவர் சுரேஷ் மற்றும் மூத்த அதிகாரிகள், தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தொழிற்சாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகளை தொழிற்சாலை மூத்த உதவி தலைவர், அவரது மனைவி நந்தினி சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகளும் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் தாங்கிய கண்காட்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் துறை, சிவில் மற்றும் பொதுஜன தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.


Next Story