உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தஞ்சையில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. தஞ்சை ரெயிலடியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் ரெயிலடியில் இருந்து தொடங்கி ஆற்றுப்பாலம், அண்ணாசிலை, பழைய பஸ் நிலையம், அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் நெகிழி பயன்பாட்டினை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்திட வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கிய நன்மையை எடுத்துரைக்கும் வகையில் பதாகைகள் எடுத்துச்செல்லப்பட்டன.
கல்லூரி மாணவிகள்
இந்த ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார பரப்புரையாளர்கள் உள்ளிட்ட 500 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்(பொறுப்பு) குணசேகரன், மாநகர நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்