உலக உணவு தின கொண்டாட்டம்


உலக உணவு தின கொண்டாட்டம்
x

தேவாலாவில் உலக உணவு தின கொண்டாடப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

உலக உணவு தினத்தையொட்டி நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் தேவாலா அன்னை வேளாங்கண்ணி பயிற்சி மையத்தில் பாதுகாப்பான உணவு- ஆரோக்கியமான வாழ்வு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய ஆசிரியர் தனிஷ்க் தலைமை தாங்கினார்.


தொடர்ந்து நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், அப்துல்கலாம் பொது சேவை மைய தலைவர் செல்வநாயகம் ஆகியோர் உணவு முறை குறித்தும், சத்தான உணவுகள் குறித்தும் பேசினர். நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.


Next Story