உலக இருதய தின விழா


உலக இருதய தின விழா
x

நெல்லையில் உலக இருதய தின விழா நடந்தது

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை அருணா கார்டியாக் கேர் சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு கலைவழி மருத்துவம் என்ற தலைப்பில் நாட்டுப்புற கலைகள் மூலம் மக்களிடம் இருதயம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமையில், டாக்டர் அருணாசலம் விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும் புதிய பஸ் நிலையம் மற்றும் டவுன் வாகையடி முக்கு பகுதியில் கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முக்கியமாக, தங்க நேரம், உணவு பழக்கவழக்கம் உள்ளிட்டவை குறித்து ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால்குதிரை, கரகம், வீதிநாடகம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. கலைநிகழ்ச்சியை சாகா கலைக்குழுவினர் நடத்தினர். நிகழ்ச்சியில், அருணா கார்டியாக் கேர் நிர்வாக இயக்குனர் ஸ்வர்ணலதா, சுஷ்மாகுமார், ராமன் ஆகியோர் கலந்து ெகாண்டனர்.

வளரும் குழந்தைகளுக்கு இருதய விழிப்புணர்வு தொடர்பான கட்டுரை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு, ஓவியங்கள், கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், இருதய வடிவில் நடைஓட்டம் மற்றும் சைக்கிள் பயிற்சி வழித்தடத்தை அமைக்கும் போட்டியும் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், தங்கள் இருதய வடிவ ஓட்ட வழித்தடத்தை சமர்ப்பித்து உள்ளனர். ஏற்பாடுகளை அருணா கார்டியாக் கேர் நிர்வாகம் மற்றும் மனோகர், முருகன், ராமசுப்பிரமணியன், சலீம் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story