உலக உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு கூட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், உலக உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மே மாதம் 17- ந் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மருத்துவமனைகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் வீரமணி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் சுந்தரம், தங்கராஜ் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனையின் முக்கியத்துவம், பின் விளைவுகள், அதை தடுக்கும் முறைகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகள் குறித்து பேசினர். இதையொட்டி மருத்துவ மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நிலைய மருத்துவ அதிகாரி புவனேஸ்வரி, டாக்டர்கள் சந்தானகுமார், ராஜா ரசூல் முகமது, செந்தில் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.