உலக உடற்காயங்கள் தின விழா


உலக உடற்காயங்கள் தின விழா
x

உலக உடற்காயங்கள் தின விழா நடந்தது.

கரூர்

கரூர் பழைய அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக உடற்காயங்கள் தின நிகழ்ச்சி கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. அப்போது உலக உடற்காயங்கள் தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் விபத்து மற்றும் உடற்காயங்கள் ஏற்படும்போது எவ்வாறு உதவிட வேண்டும் என்பது குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் விபத்து மற்றும் உடற்காயங்கள் ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு உதவிட வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:- இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பிறகு தமிழ்நாடு தான் அதிக அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய மாநிலங்களில் முதல் 2 இடங்களில் தொடர்ந்து இருக்கிறோம். சாலை விபத்துக்கள் தடுக்கப்பட வேண்டும், அதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். நீங்கள் ஒவ்வொரு முறை இருசக்கர வாகனங்களை இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து கண்டிப்பாக ஓட்ட வேண்டும். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். அனைவரும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஞானக்கண் பிரேம் நிவாஸ், மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story