அரசு பள்ளியில் உலக கடித தினம் கொண்டாட்டம்
அரசு பள்ளியில் உலக கடித தினம் கொண்டாட்டப்பட்டது.
புதுக்கோட்டை
ஆவுடையார்கோவில்:
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக கடிதம் எழுதுவது முற்றிலும் குறைந்துவிட்டது. கடிதம் எழுதுவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக கடித தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆவுடையார்கோவில் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு பிடித்த தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி வரலாற்று முதுகலை ஆசிரியர் மதியழகன் செய்திருந்தார். இதில் பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குமார் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story