உலக மலேரியா எதிர்ப்பு தினம்


உலக மலேரியா எதிர்ப்பு தினம்
x

உலக மலேரியா எதிர்ப்பு தினம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி தாலுகா மேலைச்சிவபுரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மலேரியா எதிர்ப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆர்த்தி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் உத்தமன், மாணவ-மாணவிகளுக்கு மலேரியா காய்ச்சல் உருவாக்கும் கொசு, கிருமியான ஒட்டுண்ணி அறிகுறிகள், ரத்த தடவல் வழி உறுதிப்படுத்துதல், சிகிச்சை முறைகள், தடுக்கும் வழி வகைகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் வினாக்கள் கேட்கப்பட்டு மாணவருக்கு பேனா பரிசளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அனைவரும் மலேரியா தடுப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story