அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்உலக மனநலிவு நோய் தின விழிப்புணர்வு


அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்உலக மனநலிவு நோய் தின விழிப்புணர்வு
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக மனநலிவு நோய் தின விழிப்புணர்வு நடைபெற்றது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் குழந்தைகள் நலப்பிரிவு சார்பில் உலக மனநலிவு நோய் தினம் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மனநலிவு நோய் ஓரு பரம்பரை நிலைமையால் ஏற்படும் நோயாகும். ஒரு குழந்தை வழக்கமாக 45 நிறமிகளுக்கு பதிலாக 47 நிறமிகளுடன் பிறக்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் மூளை வளர்ச்சியில் தாமதத்தையும், உடலில் இயற்கைக்கு மாறான நிலைகளையும் ஏற்படுத்தும். இவர்களுக்கு இருதய கோளாறு, குடலில் அசாதாரணமான நிலை போன்ற நிலை ஏற்படும். இவர்களுக்கு குறிப்பான எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் இல்லை. மருத்துவமனைக்கு மருத்துவ தொடர் ஆலோசனைக்கு வரும் போது பல்வேறு பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது.தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலன் கருதி ஆலோசனைகளை கேட்டு பெற வேண்டுகிறேன் என்றார்.

முன்னதாக துறை தலைவர் டாக்டர் ஆடலரசன் வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராதா, நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன், பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் இளையராஜா, இணை பேராசிரியர் திலகவதி, டாக்டர்கள் காமேஷ், வினோத்குமார், ஆனந்த்ராஜ், சிவசங்கரி, பொன்பிரபா, பாலமுருகன், மாதுரி, ஜெயசந்திரன், அருண், கனிமொழி மற்றும் குழந்தைகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


Next Story