உலக பிசியோதெரபி தினம்


உலக பிசியோதெரபி தினம்
x

தூத்துக்குடியில் உலக பிசியோதெரபி தினம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக பிசியோதெரபி தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு இந்தியன் பிசியோதெரபிஸ்ட் சங்க தூத்துக்குடி கிளை மற்றும் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் ஆகியவை சார்பில் பிசியோதெரபி குறித்த கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சி.எம். மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க மாவட்டத் தலைவர் பிதரிஸ் வல்தரீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முகம்மது நஸீர் கலந்து கொண்டு 60 வயதுக்கு மேற்பட்டோர் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட அமைப்புச் செயலர் ஆனந்தன் மற்றும் ஓய்வூதியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story