உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்தி
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்தியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஊர்தியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கூட்ட அரங்கில் உலக மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் குறித்த உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்திருந்த பொது மக்களுக்கு விதைகளுடன் கூடிய மஞ்ச பையினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், துணை இயக்குனர் மணிமேகலை, துணை கலெக்டர் தாரகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story