தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி


தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
x

தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பேரணி

மக்கள் தொகை கட்டுக்குள் வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் இருவார விழா 27.6.2022 முதல் 10.7.2022 வரை தீவிர இயக்கமாக அனுசரிக்கப்பட்டது. மேலும் 11.7.2022 முதல் 24.7.2022 வரை ஸ்திரதின்மை இயக்கமாகவும் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் உலக மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அனைவரும் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் முருகவேல், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் பொன்இசக்கி, சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் பொற்செல்வன் (தூத்துக்குடி), போஸ்கோராஜா (கோவில்பட்டி), துணை இயக்குநர் (காசம்) சுந்தரலிங்கம், நகர்நல அலுவலர் அருண்குமார், தாசில்தார் செல்வக்குமார், குடும்ப நலச் செயலகம் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மோகனரெங்கன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Next Story