உலக சமரச நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
மயிலாடுதுறையில் உலக சமரச நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் உலக சமரச நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட நீதிபதி இளங்கோ தலைமை தாங்கினார். சட்டப் பணிகள் குழுத்தலைவர் கவிதா, முதன்மை மாவட்ட நீதிபதி ராஜேஷ்கண்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் கலைவாணி ஆகியோர் பேசினர். இதில் பொதுமக்கள் பிரச்சினைகளின்றி இரு தரப்பினரிடையே சமரசம் செய்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, மாயூரம் வக்கீல் சங்கத் தலைவர் ஜெகதராஜ், மயிலாடுதுறை வக்கீல் சங்கத் தலைவர் வேலு உள்பட நீதிமன்றத்துக்கு வந்த மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
Related Tags :
Next Story