உலக மீட்பர் ஆலய திருவிழா
புளியங்குடியில் உலக மீட்பர் ஆலய திருவிழா நடந்தது.
தென்காசி
புளியங்குடி:
புளியங்குடி உலக மீட்பர் ஆலய திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 8-ம் நாளில் நற்கருணை பவனி நடைபெற்றது. 9-ம் நாளில் சப்பர பவனி நடந்தது. பாளையங்கோட்டை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி திருப்பலி நிறைவேற்றி, சப்பர பவனியை தொடங்கி வைத்தார்.
10-ம் நாளான நேற்று பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. பின்னர் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story