உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம்
உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் இணையம் வழியாக 29-ந்தேதி நடக்கிறது.
சென்னை
உலக திருக்குறள் இணையக்கல்வி கழகம் சார்பில் உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் நடைபெற இருக்கிறது. இணையம் வழியாக நடத்தப்படும் இந்த ஆய்வரங்கம், வருகிற 29-ந்தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெறுகிறது.
ஆய்வரங்கத்துக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழியல் இருக்கைக்குழு அமைப்பாளர் விஜய் ஜானகிராமன் தலைமை தாங்குகிறார். திருஞானசம்பந்தம் தொடங்கிவைக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் வரவேற்றுப்பேசுகிறார்.
ஆய்வரங்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, கனடா, ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட 19 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
Related Tags :
Next Story