உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி


உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி
x

அம்பை நகராட்சி சார்பில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை நகராட்சி சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊர்க்காடு தெற்கு காலனியில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை கொண்டு அப்பகுதியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.இதன் ஒரு பகுதியாக உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன் பாண்டியன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மேலும் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சாகிர் உசேன், சிவஞானம், உதவி திட்ட அலுவலர்கள் பரசுராம், ராமசாமி நாதன், கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் சிங்கநாதம், நகர வியாபாரிகள் சங்க துணை தலைவர் கணேசன், மற்றும் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட அலுவலர்கள் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story