உலக கழிவறை தின விழிப்புணர்வு ஊர்வலம்
திருமக்கோட்டை ஊராட்சியில் உலக கழிவறை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை ஊராட்சி மன்றம் சார்பில் உலக கழிவறை தின விழிப்புணர்வு ஊா்வலம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுஜாதா ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்று தூய்மை குறித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதில் மாணவ- மாணவிகள் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிப்பேன், மக்கும் குப்பைகளை என் வீட்டிலேயே உரமாக்கி வீட்டு தோட்டத்துக்கு பயன்படுத்துவேன், தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே தூய்மை காவலரிடம் கொடுப்பேன், பொது இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டேன் , தீங்கு விளைவிக்க கூடிய குப்பைகளை பாதுகாப்பான முறையில் கையாளுவேன் என மாணவ- மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.