உலக கழிப்பறை தின ஊர்வலம்


உலக கழிப்பறை தின ஊர்வலம்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:30 PM GMT (Updated: 23 Nov 2022 7:31 PM GMT)

இருளப்பட்டி, பசுவபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தின ஊர்வலம் நடந்தது.

தர்மபுரி

இருளப்பட்டி, பசுவபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தின ஊர்வலம் நடந்தது.

இருளப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் இருளப்பட்டி ஊராட்சியில் நாகலூர், பீரங்கி நகர், காமராஜர் நகர், இருளப்பட்டி, இந்திராகாலணி ஆகிய பகுதிகளில் உலக கழிப்பறை தினம் கடைப்பிடிக்கபட்டது. ஊராட்சி தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமாரி கண்ணன் தலைமையில் உலக கழிப்பறை தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ள பட்டது.

பின்னர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் போது வீடுகள்தோறும் கழிப்பறை கட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பசுவாபுரம்

கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் பசுவாபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பசுவபுரம் ஊராட்சி தலைவர் பழனியம்மாள் ஜெயராமன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் நித்யா மணிவண்ணன், ஊராட்சி செயலாளர் பட்டாபி துரை ஆகியோர் உறுதிமொழி வாசிக்க பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த வேண்டும், சுற்றுப்புறத் தூய்மை பாதுகாப்போம் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பழனிசாமி, கலைமணி, செல்லியம்மாள், ராமநாதன், குறளரசி, ஸ்ரீராமன், வனிதா, பத்மா உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story