சாத்தான்குளம் பள்ளியில் உலக சைவ தினம்
சாத்தான்குளம் பள்ளியில் உலக சைவ தினம் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ.ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் மற்றும் உலக சைவ தினம் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜெபசிங் தலைமை வகித்து தமிழ்நாடு உருவானதைப் பற்றியும், சைவ உணவின் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். ஆசிரியர்கள் லயன்டேனியல், ஜெரோம், ஸ்டீபன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் 20 மரக்கன்றுகளை நட்டினார்,
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் லயன் டேனியல் மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story