உலக யோகா தின விழா
உலக யோகா தின விழா
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் உலக யோகா தினவிழா நேற்றுகாலை நடந்தது. இதில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேர், 126 போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். மனவளக்கலை அறக்கட்டளை பேராசிரியர்கள் யோகா பயிற்சி அளித்தனர். தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் மைய நிர்வாகம், மனவளக் கலை மன்றம் சார்பில் நடைபெற்ற உலக யோகா தின விழாவை மைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில், தஞ்சையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1,500 மாணவ, மாணவிகளுக்கு மனவளக் கலை மன்றத்தினர் யோகா பயிற்சி அளித்தனர். இதேபோல, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை, யோகா மையம் சார்பில் நடைபெற்ற உலக யோகா தின விழாவுக்கு பதிவாளர் (பொறுப்பு) இளையாப்பிள்ளை தலைமை வகித்தார். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியரும், யோகா பயிற்றுநருமான சு. சுரேஷ்ராஜ் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் 160-க்கும் அதிகமான மாணவர்கள் சிறப்பு யோகாசன பயிற்சி செய்தனர். முன்னதாக மெய்யியல் துறைத் தலைவர் நல்லசிவம் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார். அதேபோல் தஞ்சை மன்னை நாராயணசாமி நர்சிங் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அனைத்து மாணவிகளும் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்துெகாண்டு மாணவிகளை வழிநடத்தினர். முன்னதாக கல்லூரி முதல்வர் மேற்பார்வையில் அனைத்து பயிற்சி முறைகளும் மேற்கொள்ளப்பட்டன.