வேளிமலை முருகன் கோவிலில் ஆராட்டு விழா
வேளிமலை முருகன் கோவிலில் ஆராட்டு விழா
தக்கலை:
தக்கலைக்கு அருகில் உள்ள குமாரகோவிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. 9-ந் முருகன் வள்ளி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் தமிழ் புத்தாண்டையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. மாலையில் மயில் வாகனத்தில் முருகபெருமானும், கிளி வாகனத்தில் வள்ளிதேவியும் ஆராட்டிற்கு எழுந்தருளினர். பின்னர் கோவில் குளத்தில் சாமிகளுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், குங்குமம், பஸ்பம், நெய், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராட்டு நடத்தப்பட்டது. அதன் பின் தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகனகுமார், திருவிழாக்குழு காப்பாளர் பிரசாத், தலைவர் சுனில்குமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செந்தில்குமார், கவுரவ தலைவர் குமரி ப.ரமேஷ், துணைத்தலைவர் ராமதாஸ், கவுரவ ஆலோசகர் மாதவன் பிள்ளை, தக்கலை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் விஜயா, டாக்டர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.