தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
குருபூஜை,ஜெயந்தி விழாவையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேவர் ஜெயந்தியையொட்டி, அனைத்து அரசியல் கட்சி சார்பில் பெரியகுளத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க. சார்பில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் தலைமையில் நகர செயலாளர் முகமது இலியாஸ், நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் துரைப்பாண்டி உள்பட கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் பெரியகுளம் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குழுத் தலைவர் ஓ.சண்முகசுந்தரம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கீழவடகரை ஊராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.கள்ளிப்பட்டி சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி அன்பு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் வக்கீல் தவமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் முருகானந்தம் நகராட்சி கவுன்சிலர் குருசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டி தலைமையில் மாவட்ட வக்கீல் பிரிவு துணைத் தலைவர் சன்னாசிபாபு, நகர செயலாளர் முத்துப்பாண்டி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
போடி நகர, ஒன்றிய தே.மு.தி.க. கட்சி சார்பில், தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு தென் மண்டல உட்கட்சி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பார்த்தசாரதி, போடி நகர செயலாளர் முருகவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் காமாட்சி, அவைத்தலைவர் இளங்கோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.