முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


நெல்லையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திருநெல்வேலி

நெல்லையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் மாநகர அவைத்தலைவர் வேலு சுப்பையா தலைமையில் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அவைத்தலைவர் சுப சீதாராமன், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், மானூர் யூனியன் ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் மேயர் புவனேசுவரி மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நிர்வாகிகள் சொக்கலிங்ககுமார், கவிபாண்டியன், ராஜேஷ்முருகன், ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அனுராதா சங்கரபாண்டியன், அம்பிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க

அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் மாநில துணை தலைவர் பாலு தேவர் தலைமையில் நெல்லையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் உய்க்காட்ட தேவர், மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மகாராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.-ம.தி.மு.க.

தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் வக்கீல் அரசு அமல்ராஜ் தலைமையில் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



Next Story