நொய்யல் ஆறு தூர்வாரப்படுமா?
நொய்யல் ஆறு தூர்வாரப்படுமா?
திருப்பூர்
திருப்பூர்
தொழில் நகரான திருப்பூரில் நொய்யல் ஆறு பாய்கிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாநகர் பகுதியில் வளர்மதி பாலம் முதல் ெநாய்யல் வீதி வரை நொய்யல் ஆற்றில் உள்ள செடி, கொடிகள் மாநகராட்சி சார்பில் தூர்வாரப்பட்டது. ஆனால் பழைய நடராஜன் தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றில் பல ஆண்டுகளாக செடி, கொடிகள் புதர்மண்டி கிடக்கிறது. இந்த பகுதியை மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. ஆற்றங்கரையோரம் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. ஆற்றில் செடி, ெகாடிகள் அதிகமாக உள்ளதால் விஷ ஜந்துகள் குடியிருப்புக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது. பார்வைக்கு அழகாக இருந்தாலும் ஆபத்து அதிகம். எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story