போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு; 5 ஆயிரத்து 411 பேர் எழுதினர்
தூத்துக்குடியில் நேற்று நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 5 ஆயிரத்து 411 பேர் எழுதினர்.
தூத்துக்குடியில் நேற்று நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 5 ஆயிரத்து 411 பேர் எழுதினர்.
சப்-இன்ஸ்பெக்டர் பணி
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதித்தேர்வு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதன்படி நேற்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மையங்களில் பொதுப்பிரிவினருக்கான முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. இதில் 5 ஆயிரத்து 411 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
பி.எம்.சி. மெட்ரிகுலேசன் பள்ளி தேர்வு மையத்தில் 1,464 பேரும், காமராஜ் கல்லூரியில் 847 பேரும், அதுபோல் காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளியில் 829 பேரும், புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் 1,103 பேரும், புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியில் 491 பேரும், புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் 677 பேரும் தேர்வு எழுதினர்.
5,411 பேர் எழுதினர்
தேர்வு எழுதும் மையங்களை நேற்று தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு, சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான முதன்மை எழுத்து தேர்வில் விண்ணப்பம் செய்த 6 ஆயிரத்து 400 பேரில் 5 ஆயிரத்து 411 பேர் தேர்வு எழுதினர். 989 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.