சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்துத்தேர்வு


சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்துத்தேர்வு
x

தஞ்சையில் 2-வது நாளாக நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை போலீஸ் துறையில் பணிபுரியும் 569 பேர் எழுதினர்.

தஞ்சாவூர்
தமிழக போலீஸ்துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுஅறிவு தேர்வும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தேர்வும் நடந்தது.

இந்த தேர்வை 4 ஆயிரத்து 643 பேர் எழுதினர். பல்வேறு காரணங்களால் 981 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வில் போலீஸ் துறையினருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் போலீஸ் துறையில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறுவதற்காக சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று 2-வது நாளாக நடந்தது.

569 பேர் எழுதினர்

இந்த தேர்வு எழுத 672 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களில் 103 பேர் பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத வரவில்லை. 569 பேர் மட்டுமே இந்த தேர்வை எழுதினர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கைப்பை உள்ளிட்டவைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story