வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி; கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
பாளையங்கோட்டையில் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி பஸ்சை, கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை:
பாளையங்கோட்டையில் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி பஸ்சை, கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
புகைப்பட கண்காட்சி
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பாளையங்கோட்டையில் பஸ்சில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி பஸ்சை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு கூறுகையில், ''தமிழக அரசு வ.உ.சி. 150-வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் குளிரூட்டப்பட்ட அரசு பஸ்சில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
3-ந் தேதி வரை
இந்த கண்காட்சி பஸ் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளது. வருகிற 3-ந் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ-மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, மாவட்ட நூலகர் மீனாட்சி சுந்தரம், சேவியர் கல்லூரி முதல்வர் மரியதாஸ், நல்நூலகர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.