முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 34 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை


முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 34 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை
x

போச்சம்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 34 பவுன் நகை, ரூ.4 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

போச்சம்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 34 பவுன் நகை, ரூ.4 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னாள் ராணுவ வீரர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள திருவயலூரை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 40). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கமலா. சேலம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிவசக்தி காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சேலத்திற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கி விட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்-மனைவி 2 பேரும் ஊருக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது.

போலீசார் விசாரணை

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 34 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து சிவசக்தி போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவசக்தி மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர்.

வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போச்சம்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story