ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருச்சி, கே.கே.நகர், அய்யப்ப நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் அழகுவேல் (வயது 31). இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் காரணமாக பல லட்சம் கடன் பெற்றுள்ளார். இதனால் அவரை, அவரது மனைவி கலைவாணி கண்டித்துள்ளார். இதில் மனம் உடைந்த அழகு வேல் நேற்று வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story