கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவர்கள் ஊர்வலம்
கும்பகோணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
கும்பகோணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
கிறிஸ்துமஸ் விழா- ஊர்வலம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஊர்வலம் நேற்று நடந்தது. விழாவுக்கு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி வரவேற்றார். இதில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், துணை மேயர் சு.ப.தமிழழகன், தொழில் அதிபர் ஜியாவூதீன், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஊர்வலம் பேராலயத்தில் இருந்து புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்
இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை முழக்கமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை மறை மாவட்ட பொருளாளர் சிங்கராயர் மற்றும் பிரதிநிதிகள் செய்திருந்தனர்.