உடுமலை மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா
திருப்பூர்
உடுமலை மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா
உடுமலை தாலுகா மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் உடுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.
உடுமலை தாலுகா மருந்து வணிகர் சங்க செயலாளர் சுஜாத் அலி, பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தின் பழனிச்சாமி, லட்சுமணன் மற்றும் பல்லடம், மடத்துக்குளம் தாலுகா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதயகுமார் நன்றி கூறினார்.
Next Story