மஞ்சப்பை விழிப்புணர்வு கருத்தரங்கம்


மஞ்சப்பை விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
திருப்பூர்


உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார்.நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றுப்பேசினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் சந்திரன் மீண்டும் மஞ்சப்பை என்றும் தலை ப்பில் பேசினார். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைக்கு நாம் மாற வேண்டியது அவசியம் குறித்தும் பல்வேறு கருத்துகளை அவர் எடுத்துக் கூறினார். மேலும் மஞ்சள் பை விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, ஸ்லோகம் எழுதும் போட்டி மற்றும் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் மாணவி சபரி ஈஸ்வரி நன்றி கூறினார்.

=======


Next Story