சம்பா நெற்பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல்


சம்பா நெற்பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

சீர்காழி பகுதியில் சம்பா நெற்பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் சம்பா நெற்பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காரணமாக பரவலான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, இனாம் குணதலபாடி, புளிச்சக்காடு, ஆர்ப்பாக்கம், கொள்ளிடம், மாதாணம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, கொண்டல், எடக்குடி வடபாதி, புத்தூர், அரசூர், எருக்கூர், மாதிரி வேலூர், குன்னம், பெரம்பூர், திருமுல்லைவாசல், உமையாள்பதி, வேட்டங்குடி, ஆரப்பள்ளம், மகேந்திரப்பள்ளி, காட்டூர், கடவாசல், வடகால், திட்டை, செம்மங்குடி, சட்டநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

மஞ்சள் நோய் தாக்குதல்

மேலும் தாழ்வான பகுதியில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி முற்றிலும் நாசமானது. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களில் தற்போது மஞ்சள் நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்குதல் காரணமாக மேற்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது.இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story