மழை வேண்டி மஞ்சள் நீர் கலச ஊர்வலம்
தட்டார்மடத்தில் மழை வேண்டி மஞ்சள் நீர் கலச ஊர்வலம் நடைபெற்றது.
தட்டார்மடம்:
தட்டார்மடத்தில் தேவையான மழை பெய்து குளம், கிணறுகளில் நீர் வரத்து உண்டாகி விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சினை தீரவும் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்பாளுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தட்டார்மடம் மாரியம்மன் கோவிலில் இருந்து மீன் கடை இசக்கியம்மன் கோவில் வரை பெண்கள் மஞ்சள் நீர் கலசம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
நிகழ்ச்சிக்கு நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சவிதா செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்து அன்னையர் முன்னணி சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ராமகனி, இந்து முன்னணி ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சீனிவாசன், பொருளாளர் ஐயப்பன் முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.